மாதவனை இயக்கும் கரு.பழனியப்பன்!

மாதவன், கரு.பழனியப்பன் இணையும் ‘கிராமஃபோன்’

செய்திகள் 19-Aug-2016 4:45 PM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் அமீரின் உதவியாளர் சந்திரா இயக்கத்தில் ‘கள்ளன்’ படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் கரு.பழனியப்பன், இப்படம் தவிர வேறு ஒரு படத்தில் நடிக்கவும் கமிட் ஆகியிருக்கிறார். இந்த படங்களை முடித்த கையோடு மாதவனை கதாநாயகனாக நடிக்க வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் கரு.பழனியப்பன். இந்த படத்திற்கு ‘கிராமஃபோன்’ என்று டைட்டில் சூட்டியுள்ளார். ‘கள்ளன்’ படத்தை தொடர்ந்து வேறு ஒரு படத்திலும் கரு.பழனியப்பன் நடிக்கவிருப்பதைப் போலவே மாதவனும் வேறு இரண்டு படங்களில் கமிட் ஆகியுள்ளாராம். அதனால் இவர்கள் இருவரும் தங்கள் கமிட் செய்து வைத்துள்ள படங்களை முடித்துவிட்டு தான் ‘கிராமஃபோனி’ல் இணையவிருக்கிறார்கள். ‘மந்திரப்புன்னகை’ படத்தை தொடர்ந்து கரு.பழனியப்பன் நடிக்கும் ‘கள்ளன்’ படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்து விட்டதாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரொக்கெற்றி - தி நம்பி effect டீஸர்


;