26-ஆம் தேதி வெளியாகிறது ‘பெசையும் எசையா…’

உள்குத்தில் இடம் பெறும் ‘பெசையும் எசையா…’ 26-ல் வெளியாகிறது!

செய்திகள் 19-Aug-2016 4:23 PM IST Top 10 கருத்துக்கள்

‘அட்டகத்தி’ தினேஷ் கதாநாயகனாக நடிக்க, கார்த்திக் ராஜு இயக்கி வரும் படம் ‘உள்குத்து’. ‘திருடன் போலீஸ்’ படத்தை தயாரித்த ‘கென்ன்யா ஃபிலிம்ஸ்’ தயாரிக்கும் இப்படம் மீனவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து அதிரடி ஆக்‌ஷன், நகைச்சுவை கலந்த சென்டிமென்ட் படமாக உருவாகி வருகிறது. ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கும் இப்படத்தில் இடம் பெறும் ‘பெசையும் எசையா…’ என்ற பாடலை வருகிற 26-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர்.

‘‘இந்த உலகத்தில் எப்போதும் முடிவில்லாமல் இருப்பது காதல் ஒன்று மட்டும்தான். அந்த காதலை மிக அழகாக தன்னுடைய மெல்லிசையால் இந்த ‘பெசையும் எசையா…’ பாடல் மூலம் சொல்லியிருக்கிறார் இசை அமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர்’’ என்கிறார் இப்படத்தை தயாரித்து வரும் ஜெ.செல்வகுமார். கவிஞர் விவேக் வேல்முருகன் எழுதியுள்ள இப்பாடலை வந்தனா ஸ்ரீனிவாசன் பாடியுள்ளார்.

‘‘காதலுக்கு புத்துயிர் கொடுக்கும் விதமாக இப்பாடல் அமைந்துள்ளது. ‘அட்டகத்தி’ தினேஷுடன் நந்திதா கதாநாயகியாக நடித்துள்ள இப்படம் மீனவர்களின் வாழ்க்கையை மிக யதார்த்தமாக சொல்லும் படமாகவும் இருக்கும்’’ என்கிறார் இப்படத்தை இயக்கி வரும் கார்த்திக் ராஜு.
விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை ‘அபி & அபி’ அபினேஷ் இளங்கோவன் கைபற்றியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டான டீஸர்


;