சாதனை செய்த சமுத்திரக்கனியின் அப்பா!

50-வது நாளை கடந்து ஓடும் சமுத்திரக்கனியின் அப்பா!

செய்திகள் 19-Aug-2016 11:24 AM IST VRC கருத்துக்கள்

இப்போதுள்ள சூழ்நிலையில் ஒரு படம் வெளியாகி ஒரு வாரத்திற்கும் மேல் ஓடினால் அதுவே பெரும் சாதனையாக கருதப்படுகிறது. அப்படியிருக்க, எந்தவொரு நட்சத்திர அந்தஸ்தும் இல்லாமல் ஐந்தாறு குழந்தைகளை மையப்படுத்தி திரைக்கதை அமைத்து சமுத்திரக்கனி இயக்கிய ‘அப்பா’ சத்தமில்லாமல் தொடர்ந்து 50 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது. இதற்கு காரணம், ‘அப்பா’ ஒவ்வொருவரின் வாழ்க்கையுடனும் பின்னிப் பிணைந்த அழகான திரைக்கதை என்பது தான்!

குழந்தைகளைகளை தவறாக எண்ணுவதாலும் அவர்கள் மீது தங்களது ஆசைகளை திணிப்பதாலும் ஏற்படும் விளைவுகளை யதாரத்தமான காட்சி அமைப்புகளுடன் இப்படத்தில் அனைவரையும் கவரும் படியாக சொல்லியிருந்தார் சமுத்திரக்கனி! பொழுதுபோக்கு அமசங்கள் நிறைந்த படங்களை மட்டுமின்றி இதுபோன்ற சமூக கருத்துக்கள் தாங்கி வரும் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது என்பதற்கு மீண்டும் ஒரு உதாரணமாக விளங்குகிறது சமுத்திரக்கனியின் அப்பா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;