‘தர்மதுரை’க்கு டாக்டர் ராமதாஸ், தொல்.திருமாவளவன் பாராட்டு!

விஜய்சேதுபதி படத்திற்கு டாக்டர் ராமதாஸ், தொல்.திருமாவளவன் பாராட்டு!

செய்திகள் 19-Aug-2016 10:49 AM IST VRC கருத்துக்கள்

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா முதலானோர் நடித்த ‘தர்மதுரை’ படம் இன்று வெளியாகிறது. இப்படத்தை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் பார்த்து பாராட்டியுள்ளனர்.
‘தர்மதுரை’யை பார்த்து பாராட்டு தெரிவித்த டாக்டர் ராமதாஸ், ‘‘நல்ல கதை, நன்றாக இயக்கியுள்ள படம். தனியார் மற்றும் அரசு கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் தர்மதுரை’ என்று பாராட்டியுள்ளார்.

‘‘நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல ஒரு படத்தை பார்த்த அனுபவத்தை தந்தது தர்மதுரை’’ என்று கருத்து தெரிவித்துள்ளார் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.

தொல்.திருமாவளவன், ‘‘ஒரு குடும்பத்தின் உணர்ச்சி மோதல்களை மிக அழகாக படம் பிடித்து காட்டியிருக்கிரார் இயக்குனர் சீனு ராமசாமி’’ என்று புகழாரம் சூட்டியிருப்பதோடு, ‘‘இப்படத்தில் சமூக நல்லிணக்கம், திருநங்கை மறுவாழ்வு, காதல் ஆகியவற்றையும் அழகாக சித்தரித்திருக்கிறார் இயக்குனர் சீனுராமசாமி’’ என்றும் கூறியுள்ளார். ‘

‘ஸ்டுடியோ-9’ நிறுவனம் சார்பில் ஆர்.கே.சுரேஷ் தயாரித்துள்ள ‘தர்மதுரை’க்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;