‘ஜோக்கர்’ படத்தை தொடர்ந்து ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பாக உருவாகியுள்ள படம் கார்த்தியின் ‘காஷ்மோரா’. இப்படம் தீபாவளி வெளியீடாக வரவிருக்கிறது. கோகுல் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தியுடன் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் உட்பட பலர் நடித்துள்ளனர். ஹாரர், காமெடி, ஆக்ஷன், பீரியட் படமாக உருவாகியுள்ள ‘காஷ்மோரா’வில் கார்த்தி மூன்று வெவ்வேறு விதமான வேடங்களில் நடித்துள்ளார். அந்த மூன்று தோற்றங்களும் மிகப் பெரிய அளவில் பேசப்படும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாம். இதற்காக ஏழு மாதக் காலம் எடுத்துகொண்டு 47 தோற்றங்களை பரிசீலனை செய்து, அதிலிருந்து 3 வேடங்களை இறுதி செய்துள்ளார் இயக்குனர் கோகுல்.
இப்படத்தில் இடம்பெறும் பீரியட் காட்சிகளை படமாக்க பல்வேறு இடங்களில் மிக பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. படத்தின் முக்கியமான காட்சியில் இடம்பெறும் தர்பார் காட்சிக்காக சென்னையில் உள்ள வானகரத்தில் மிகப் பிரம்மாண்டமான அரங்கு ஒன்று அமைக்கப்பட்டு அங்கு கார்த்தி மற்றும் துணை நடிகர்கள் பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டது. இப்படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு அரங்குகளும் இயக்குனர், கலை இயக்குனர் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில், மிக நுணுக்கமாக உருவாக்கப்பட்டுள்ளதாம். இப்படம் மற்ற பீரியட் படங்களைப் போல் இல்லாமல் நகைச்சுவை, ஹாரர், ஆக்ஷன் கலந்த ஒரு கலவையாக இருக்கும் என்கின்றனர் படக்குழுவினர். இப்படத்தின் பிரம்மாண்டத்திற்கு ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு, ராஜீவனின் கலை இயக்கம், சந்தோஷ் நாராயணனின் இசை ஆகியவை முக்கிய பங்கு வகிக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனமும் ‘விவேகானந்தா...
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...
‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கியுள்ள படம் ‘ஜிப்ஸி’. இந்த படத்தில் ஜீவா...