சுசிகணேசன இயக்கத்தில் 2006-ல் வெளியாகி வெற்றிபெற்ற ‘திருட்டுப்பயலே’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருக்கிறது என்ற செய்தியை சில நாட்களுக்கு முன் நமது இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம். இரண்டாம பாகத்தையும் முதல் பாகத்தை தயாரித்த ‘ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட்’ நிறுவனமே தயரிக்கிறது. அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்கவிருக்கிற இப்படத்தில் பாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கிறார். சுசிகணேசனால் ‘ஃபைவ் ஸ்டார்’ படம் மூலம் கதாநாயகனாக ஆறிமுகப்படுத்தப்பட்ட பிரசன்னா வில்லனாக நடிக்கிறார். கதாநாயகி, மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு நடந்து வருகிறது.
‘‘பாகம் 2…..3… என்பது பொதுவாக கதாநயகனை மையப்படுத்துவதாக இருந்தாலும் சில நேரங்களில் கதை அமைப்பை மையப்படுத்தும்! கையில் சிக்கிய ரகசியத்தை வைத்து காசு பண்ணும் பின்புலம் இன்றும், என்றும் எப்போதும் பசுமையாக பொருந்துவதால் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு கூடுதல் உத்வேகம் பிறந்தது’’ என்கிறார் இப்படத்தை இயக்கும் சுசி கணேசன். இப்படத்தின் முதல் பாகத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் நடைபெற்றதைப் போலவே இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பிற்கும் ஒரு அழகான தீவை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
‘கூர்கா’ படத்தில் கதாநாயகனாக நடித்த காமெடி நடிகர் யோகி பாபு முதன் முதலாக ஒரு படத்தில் இரட்டை...
மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படம் ‘FIR’. ‘சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம்...
‘துருவங்கள் பதினாறு’ படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் ‘நரகாசூரன்’. அரவிந்த்சாமி,...