வழக்கமாக தீபாவளி, பொங்கல் என்றால் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்கள் வராதா என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், இந்த வருடத் தீபாவளிக்கு அதற்கு அடுத்த கட்டத்திலிருக்கும் நடிகர்களின் பெரிய படங்கள் வெளிவருவது கூடுதல் கவனத்தைப் பெற்றிருக்கிறது. அந்தவகையில் முதல் ஆளாக தீபாவளி ரேஸில் நுழைந்தவர் ‘காஷ்மோரா’ கார்த்தி. கிட்டத்தட்ட 2 வருட காலமாக பிரம்மாண்டமாக உருவாகி வரும் பீரியட் ஃபேன்டஸி ஹாரர் படமான ‘காஷ்மோரா’தான் இந்த தீபாவளி ரிலீஸில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம். 60 கோடி பட்ஜெட், கண்ணைக் கவரும் செட்கள், உயர்தர கிராபிக்ஸ் என ஒரு முழுநீள என்டர்டெயின்மென்ட் படத்தைப் பார்க்க குடும்ப ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
கார்த்தியைத் தொடர்ந்து அவரின் நண்பரான விஷாலும் தீபாவளி ரேஸில் சமீபத்தில் இணைந்தார். சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி ஆகியோர் நடிக்கும் ‘கத்தி சண்டை’ படத்தைத் தொடர்ந்து நேற்று தனுஷும் தனது ‘கொடி’ பட ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். ஆர்.எஸ்.துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ், த்ரிஷா, ‘பிரேமம்’ அனுபமா பரமேஸ்வரி ஆகியோர் ‘கொடி’ படத்தில் நடித்துள்ளனர்.
‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘கர்ணன்’....
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, மலையாள...
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து...