‘கீ’யில் இணையும் ஜீவா, நிக்கி கல்ராணி!

மைக்கேல் ராயப்பனின் பத்தாவது படம்  ‘கீ’

செய்திகள் 18-Aug-2016 3:10 PM IST Top 10 கருத்துக்கள்

‘நாடோடிகள்’, ‘ஈட்டி’, ‘மிருதன்’ உட்பட பல படங்களை தயாரித்த நிறுவனம் மைக்கேல் ராயப்பனின் ‘குளோபல் இன்ஃபோடெயின்மென்ட்’. இந்நிறுவனம் தற்போது
சிம்பு நடிப்பில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன’ என்ற படத்தை தயாரித்து வருவதுடன் ஜீவா நடிப்பிலும் ஒரு படத்தை தயாரிக்கிறது. ஜீவா நடிக்கும் படத்திற்கு ‘கீ’ என்று பெயரிட்டுள்ளனர். இது இந்நிறுவனத்தின் பத்தாவது தயாரிப்பாகும். இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கிய இப்படத்தில் ஜீவாவுடன் கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக அனைகா நடிக்கிறார். இவர்களுடன் ஆர்.ஜே.பாலாஜி, பத்மசூர்யா, ராஜேந்திர பிரசாத், சுஹாசினி மணிரத்னம், மனோபாலா, மீரா கிருஷ்ணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இயக்குனர் செல்வ ராகவனிடம் உதவியாளராக பணிபுரிந்த காலீஸ் ‘கீ’ படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை ‘ரங்கூன்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த அனீஸ் தருண் குமார் கவனிக்கிறார். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். படத்தொகுப்பை நாகூரன் கவனிக்க, கலை இயக்கத்தை எஸ்.எஸ்.மூர்த்தி கவனிக்கிறார். இன்று துவகிய இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து பல நாட்கள் நடக்கவிருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொரில்லா - ட்ரைலர் 1


;