‘ஜோக்கர்’ விளம்பரம் செய்த புரட்சி!

மக்களுக்காக கழிவறை கட்டும் ‘ஜோக்கர்’ படக்குழுவினர்

செய்திகள் 18-Aug-2016 1:31 PM IST VRC கருத்துக்கள்

கடந்த வாரம் வெளியாகி பத்திரிகைகள், ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் பெரும் பாராட்டுக்களுடன்வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ஜோக்கர்’. மக்கள் பிரச்சனைகளை முன் வைத்து சமூக அக்கறையுடன் ராஜு முருகன் இயக்கிய இப்படம் சம்பந்தமாக நேற்று வித்தியாசமான ஒரு விளம்பரம் வெளியாகியிருந்தது. அந்த விளம்பரத்தில் ‘‘தோழர்களே! திருட்டு வி.சி.டி.யில், இணைய தரவிறக்கத்தில் படம் பார்ப்பதும் ஊழலின், சுரண்டலின் இன்னொரு அங்கம் தான். ஒரு சினிமா பலநூறு தொழிலாளர்களின் வியர்வை, சில வருட உழைப்பு! இதையும் தாண்டி திருட்டு வி.சி.டி.யில் படம் பார்க்கும் தோழர்கள், அதற்கான நியாயமான தொகையை கீழ்க் கண்ட வங்கி கண்க்கில் செலுத்திவிடுங்கள். நீங்கள் அனுப்புகிற பணம் இந்த தேசத்தில் கழிவறை இல்லாத குடிமக்களுக்கு கழிவறை கட்டித்தர பயன்படுத்தப்படும்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த விளம்பரம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் விளைவாக பத்துக்கும் மேற்பட்டவர்கள் அந்த விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வங்கி கணக்குக்கு ( A/C NAME : DREAM WARRIOR PICTURES, A/C NO: 4211747273, IFSC CODE : KKBK0000462) பணத்தை அனுப்பி ‘ஜோக்கர்’ மூலம் தங்களை சமூக பணியில் அர்ப்பணித்துக்கொண்டுள்ளனர். இது போன்று மேலும் பலர் பணம் வழங்க முன் வந்து அது சம்பந்தமாக் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி வருகிறார்கள். இப்போது ஒரு கழிவறை கட்டும் அளவிற்கான பணம் வங்கி கணக்கில் சேர்ந்துள்ளதால் எங்கு கழிவறை கட்டுவது என்பது போன்ற விஷயங்களை பரிசீலித்து வருகின்றனர் ‘ஜோக்கர்’ பட தயாரிப்புதரப்பினர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;