எதிர்பார்ப்பை எகிற வைத்த கார்த்தியின் ‘காஷ்மோரா’!

நேற்று வெளியிடப்பட்ட ‘காஷ்மோரா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

செய்திகள் 18-Aug-2016 11:50 AM IST Chandru கருத்துக்கள்

‘ஜோக்கர்’ படத்திற்குக் கிடைத்துவரும் ஏகப்பட்ட பாராட்டுக்களும், நல்ல விமர்சனங்களாலும் சந்தோஷத்திலிருக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட படைப்பு ‘காஷ்மோரா’. கோகுல் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் கார்த்தி மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிக்க கார்த்தியின் அப்பாவாக விவேக் நடித்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு கலை இயக்கத்தை செய்துள்ளார் ராஜீவன்.

பிரம்மாண்டமான போர்க்காட்சிகளையும், நடுநடுங்க வைக்கும் திகில் காட்சிகளையும், வயிறு குலுங்க வைக்கும் காமெடிக் காட்சிகளையும் கொண்டுள்ள ‘காஷ்மோரா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அறிவிக்கப்பட்டபடி நேற்று இரவு வெளியிடப்பட்டது. யாருமே எதிர்பார்க்காத வண்ணம் கார்த்தியின் தோற்றம் வித்தியாசமாக இருந்ததோடு, போர்க்காட்சிகளை பின்னணியாகக் கொண்டு போஸ்டர் உருவாக்கப்பட்டிருந்தால் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துள்ளது இந்த ஃபர்ஸ்ட் லுக். இந்திய அளவில் காஷ்மோரா ட்விட்டரில் டிரென்டிங்கும் ஆனது. பலரும் படத்தைப் பார்க்க இப்போதே ஆவலாக இருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். காஷ்மோரா தீபாவளி வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;