பிரபாஸின் உறவினர் கதாநாயகனாக நடிக்கும் ‘முன்னோடி’

ரௌடிகளின் மறுபக்கத்தைச் சொல்லும் முன்னோடி!

செய்திகள் 18-Aug-2016 11:25 AM IST VRC கருத்துக்கள்

சினிமா மீது கொண்ட காதலால எந்த ஒரு இயக்குனரிடமும் அசிஸ்டென்டாக பணிபுரியாமல் எஸ்.பி.டி.ஏ.குமார் என்ற தொழிலதிபர் இயக்கும் படம் ‘முன்னோடி’. எந்தவொரு மனிதனும் பிறக்கும்போதே ரௌடியாக பிறப்பதில்லை. அவன் வளரும் சூழல் தான் அவனை ரௌடியாக மாற்றுகிறது. அப்படி ரௌடியாக வளரும் ஒருவன் வேறொரு சூழ்நிலையில் மனம் திருந்தி நல்லவனாக மாற முயற்சிக்கிறான். அவனது முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பதை சொல்லும் படமாம் ‘முன்னோடி’.

எஸ்.பி.டி.ஏ.ராஜசேகர், சோஹம் அகர்வால் இருவரும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் தெலுங்கு தேசத்தை சேர்ந்த ஹரிஷ் கதாநாயகனாகவும், யாமினி பாஸ்கர் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களில் ஹரிஷ் தெலுங்கு நடிகர் பிரபாஸின் உறவினராம்! வில்லன்களாக ‘கங்காரு’ படத்தில் ஹீரோவாக நடித்த அர்ஜுனா, ‘குற்றம் கடிதல்’ படத்தில் நடித்த நவநீதன் இருவரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் சித்தாரா, ஷிஜாய் வர்கீஸ், நிரஞ்சன், சுரேஷ், தமன், வினுகிருதிக் ஆகியோரும் நடிக்கிறார்கள். வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்ய, கே.பிரபு சங்கர் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சாஹோ டீஸர்


;