‘ஜோக்கரு’க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு!

பாராட்டு மழையில் நனையும் ஜோக்கர்!

செய்திகள் 18-Aug-2016 10:46 AM IST VRC கருத்துக்கள்

சென்ற வாரம் வெள்ளிக்கிழமை (12-8-16) வெளியான ‘ஜோக்கர்’ படத்திற்கு நாளுக்கு நாள் பெரும் வரவேற்பு கிடைத்து வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்க, திரையுலக பிரபலங்கள் மட்டுமல்லாமல் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களின், சமூக ஆர்வலர்களின் பாராட்டுக்களும் குவிந்தவண்ணம் உள்ளன. ஜோக்கரை பார்த்து ‘இதில் யாரை பாராட்டுவது என்றே தெரியவில்லை. இயக்குனர், நடிகர் இசை அமைப்பாளர்… கண்களில் கண்ணீர்! தயவு செய்து பாருங்கள்!’’ என்று குறிப்பிட்டிருந்தார் நடிகர் தனுஷ்! அவரை தொடர்ந்து இப்போது ஜோக்கருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெரும் பாராட்டும் கிடைத்துள்ளது. ஜோக்கர் குறித்துன் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘ applaud the team of #joker, brilliant film!’’ என்று குறிப்பிட்டுள்ளார். குக்கூ ராஜு முருகன் இயக்கத்தில் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவன தயாரிப்பில் உருவான ஜோக்கரில் குரு சோமசுந்தரம், ரம்யா பாண்டியன், காயத்ரி கிருஷ்ணா மு.ராமசாமி, பவா செல்லதுரை உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு செழியன் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;