‘முடிஞ்சா இவன புடி’க்கு தியேட்டர்கள் அதிகரிப்பு!

‘முடிஞ்சா இவன புடி’ ஒரு வாரத்தில் 18 கோடி ரூபாய் வசூல்!

செய்திகள் 18-Aug-2016 10:39 AM IST VRC கருத்துக்கள்

‘நான் ஈ’ சுதீப் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகி வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் படம் ‘முடிஞ்சா இவன புடி’. இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் வரும் வெள்ளி கிழமையிலிருந்து (19-8-16) கூடுதலாக 120 தியேட்டர்களில் ‘முடிஞ்சா இவன புடி’ படத்தை திரையிடப்படவிருப்பதாக இப்படத்தின் தயாரிப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே தினம் வெளியான இப்படத்திற்கு கன்னடத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது என்றும் கன்னடத்தில் மட்டும் இப்படம் ஒரு வாரத்தில் 18 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்றும் இப்படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். ‘முடிஞ்சா இவன புடி’யில் சுதீப்புடன் நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், நாசர், சதீஷ், டெல்லி கணேஷ், முகேஷ் திவாரி, சாய் ரவி, அவினாஷ், சரத் லோகித்ஷவா முதலானோர் நடித்திருக்கிறார்கள். டி.இமான் இசை அமைத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைக்கோ ட்ரைலர்


;