கௌதம் கார்த்திக்கை இயக்கும் கண்ணன்!

கண்ணன் இயக்கத்தில் கௌதம் கார்த்திக்!

செய்திகள் 17-Aug-2016 6:08 PM IST VRC கருத்துக்கள்

‘ஜெயம் கொண்டான்’, ‘சேட்டை’, ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ முதலான படங்களை இயக்கிய கண்ணன் அடுத்து கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்தை இயக்குகிறார். ‘அபிரா பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவம சார்பாக ஆஷாஸ்ரீ தயாரிக்கும் இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார் வி.என்.மோகன். இவர் பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் ஆவார். சண்டை பயிற்சிக்கு சில்வா, படத்தொகுப்புக்கு ஆர்.கே.செல்வா என கூட்டணி அமைத்துள்ள கண்ணன் இப்படத்தில் நடிக்கவிருக்கும் கதாநாயகி, மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்களை விரைவில் அறிவிக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு நாளை மறுநாள் (19-8-16) துவங்கி, தொடர்ந்து 45 நாட்கள் நடெபெறவிருப்பதாக அறிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் - டீசர்


;