ராதாமோகன், அருள்நிதி இணையும் படத்தின் தலைப்பு?

ராதாமோகன், அருள்நிதி இணையும் பிருந்தாவனம்!

செய்திகள் 17-Aug-2016 2:47 PM IST VRC கருத்துக்கள்

ராதா மோகன் இயக்கத்தில் அருள்நிதி, அறிமுகம் தான்யா நடிக்கும் படத்திற்கு ‘பிருந்தாவனம்’ என்ற பெயரை சூட்டியுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று காலை கர்நாடக மாநிலத்திலுள்ள சக்லேஷ்ப்பூரில் துவங்கியது. ‘சேதுபதி’ படத்தை தயாரித்த ‘வான்சன் மூவீஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் விவேக் நடிகர் விவேக்காகவே நடிக்கிறார். படப்பிடிப்பு துவங்கும் முன் நடிகர் விவேக், தனது இருபத்தி ஏழு லட்சத்து முப்பத்தெட்டாயிரத்து ஒன்றாவது (27,38,001) மரக்கன்றை சக்லேஷ்ப்பூரில் நட்டார். ‘உப்புக்கருவாடு’ படத்தை தொடர்ந்து ராதா மோகன் இயக்கும் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் விவேக் ஒளிப்பதிவாளராக பணிபுரிகிறார். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். கலை இயக்கத்தை கதிர் மேற்கொள்கிறார். இப்படத்தை தயாரித்து வரும் ‘வான்சன் மூவீஸ்’ நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பாக உருவாகி வரும் படம் ‘எனக்கு வாயத்த அடிமைகள்’. இப்படத்தில் ஜெய், ப்ரணிதா கதாநாயகன் கதாநாயகியாக நடிக்க மகேந்திரன் ராஜாமணி இயக்கி வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

லைப் ஆப் ராம் வீடியோ பாடல் - 96


;