உலக புகைப்பட தினத்தை (19-8-16) முன்னிட்டு சென்னையில் சர்வதேச அளவில் அரிய வகை கேமராக்களின் அருங்காட்சியகம் திறக்கப்பட உள்ளது. பிரபல ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர் கைவண்ணத்தில், சென்னையிலுள்ள வி.ஜி.பி.ஸ்னோ கிங்டம் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தை நாளை (18-8-19) காலை பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் திறந்து வைக்கிறார். இந்த அருங்காட்சியகத்தில் உலகின் அதி நவீன கேமராக்கள் உட்பட அனைத்து ரக கேமராக்களும் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்குமாம். இது தவிர அரிய வகை புகைப்படங்கள், புகைப்பட கலை தொடர்பான சுவாரஸ்ய தகவல்கள் அடங்கிய புத்தகங்கள் ஆகியவையும் இடம் பெற்றிருக்குமாம். கேமரா அருங்காட்சியகத்தை பி.சி.ஸ்ரீராம் திறந்து வைக்க, புகைப்பட அருங்காட்சியகத்தை நடிகர் சிவகார்த்திகேயன் திறது வைக்கிறார். இந்த அருங்காட்சியகம் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்படிருக்குமாம்!
ஆர்.டி.ராஜாவின் ‘ 24 AM STUDIOS’ நிறுவனமும், கோட்டபடி ராஜேஷின் கே.ஜே.ஆர்.ஸ்டூடியோஸ் நிறுவனமும்...
ரெமோ, சீமராஜா ஆகிய படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர்.டி.ராஜாவின் ‘ 24 AM STUDIOS’...
சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெமோ, சீமராஜா முதலான படங்களை தயாரித்த நிறுவனம் ஆர்.டி.ராஜாவின் ‘ 24 AM...