ஹிட் ராசி : மீண்டும் களத்தில் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி!

ரெமோ படம் வெளியாகும் அக்டோபர் 7ஆம் தேதி ‘றெக்க’ படமும் ரிலீஸாகிறது!

செய்திகள் 17-Aug-2016 11:31 AM IST Chandru கருத்துக்கள்

ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 7ஆம் தேதி வெளியீடு என முதல் ஆளாக ரிலீஸ் தேதியை அறிவித்தது ‘ரெமோ’. வெள்ளி, சனி, ஞாயிறு, ஆயுத பூஜை, விஜய தசமி, மொஹரம் பண்டிகை என வரிசையாக 6 நாட்கள் வசூலை வாரிக்குவிக்கும் வாய்ப்பிருப்பதால் இந்த தேதியை குறிவைத்தே இப்போது பல பெரிய படங்கள் பரபரப்பாக வேலை பார்த்து வருகின்றன. ரெமோ படத்தைத் தொடர்ந்து கவலை வேண்டாம், போகன், தேவி ஆகிய படங்களும் இதே தேதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் அக்டோபர் 7ஆம் தேதி றெக்க படமும் ரிலீஸாகவிருக்கிறது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விஜய் சேதுபதி நடித்த ‘சூது கவ்வும்’ படமும், சிவகார்த்திகேயன் நடித்த ‘எதிர்நீச்சல்’ படமும் ஒரே நாளில் வெளியாகி இரண்டு படங்களுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனால் ரெமோ, றெக்க இரண்டுமே வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;