கௌதமியுடன் பிரச்சனையா? - ஸ்ருதிஹாசன் விளக்கம்

‘சபாஷ் நாயுடு’வில் கௌதமி, ஸ்ருதிஹான்சன் இடையில் பிரச்சனையா?

செய்திகள் 17-Aug-2016 11:00 AM IST VRC கருத்துக்கள்

கமல்ஹாசன் இயக்கி, நடித்து வரும் திரைப்படம் ‘சபாஷ் நாயுடு’. இப்படத்தில் கமல்ஹாசன் மகள் ஸ்ருதி ஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை கௌதமி ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாக ’சபாஷ் நாயுடு’ படத்தில் கௌதமி ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுவது ஸ்ருதி ஹாசனுக்கு பிடிக்கவில்லை என்ற வகையில் ஆதாரமற்ற செய்திகள் பரவி வருகிறது. ஆனால் இவை அனைத்தும் வெறும் கட்டுக் கதைகள் தான் என்று சொல்லி இருக்கிறார் ஸ்ருதி ஹாசன். இது குறித்து
ஸ்ருதி ஹாசனின் செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார். அதில்,

‘‘தனக்கென்று ஒரு ஸ்டைல், டிசைன் என தனித்துவமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஸ்ருதி ஹாசன், தன்னுடைய திரைப்படங்களிலும் அதையே தான் விரும்புகிறார். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய ஆடை அலங்காரம் மீதும், தன்னுடைய தோற்றத்தின் மீதும் அதிக அக்கறை கொண்ட ஸ்ருதி, அதனை பற்றி தயாரிப்பாளர்களிடமும், இயக்குனர்களிடமும் கலந்து பேசுவது வழக்கம். தன்னுடைய தந்தையின் 'சபாஷ் நாயுடு படத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வளரும் மாடர்ன் பெண்ணாகவும், துடுக்கான பெண்ணாகவும் நடிக்கிறார் ஸ்ருதி. இதனை கருத்தில் கொண்டு, அந்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப சில ஆடைகளை வடிவமைத்து கொடுத்து இருக்கிறார் கௌதமி. ஒரு ஆடை வடிவமைக்கப்பட்டதும் அதை இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரிடம் காண்பித்து கருத்துகள் கேட்பது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் கௌதமி வடிவமைத்த ஆடைக்கு சில யோசனைகளை அவர்கள் கூற, அதற்கு ஏற்றார் போல் கௌதமி ஆடை வடிவமைத்து கொடுத்திருக்கிறார். ஸ்ருதியும் தன் பங்குக்கு தன்னுடைய உடை அலங்காரம் படத்தின் கதைக்கு ஏற்பவும் , பாத்திர படைப்புக்கும் ஏற்ற மாதிரி இருக்க வேண்டும் என்று கௌதமியுடன் ஒருங்கிணைந்து தான் செயல்பட்டுள்ளார்.

சினிமாவை தவிர்த்து நிஜ வாழ்க்கையிலும் ஸ்ருதி, கௌதமி இருவருக்கும் இடையே நிலையான அன்பு இருந்து வருகிறது. ஸ்ருதியும் சரி, அவருடைய தந்தையும் சரி, இருவருமே மிகவும் அழகான உறவை தான் தங்களுக்குள் பகிர்ந்து வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஸ்ருதியின் பிறந்த நாள் விழாவில் கூட கௌதமி பங்கேற்று தன்னுடைய அன்பை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அப்படியிருக்க வந்து கொண்டிருக்கும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஸ்வரூபம் 2 மேக்கிங் வீடியோ


;