கண்கலங்கிய தனுஷ்... மக்களுக்கு வேண்டுகோள்!

‘ஜோக்கர்’ திரைப்படம் பார்த்து கண்கலங்கிய தனுஷ் படத்தைப் பார்க்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்

செய்திகள் 17-Aug-2016 10:01 AM IST Chandru கருத்துக்கள்

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘ஜோக்கர்’ படத்திற்கு நாளுக்கு நாள் வரவேற்பு கூடிக் கொண்டே வருகிறது. படத்தின் முதல் நாளைவிட இரண்டாவது, மூன்றாவது நாட்களில் படத்திற்கு வரும் மக்களின் கூட்டம் அதிகரித்ததோடு, ‘ஜோக்கர்’ படத்திற்கான திரையரங்கங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. ரசிகர்கள், விமர்சகர்கள் என பலரது பாராட்டுக்களையும் பெற்று வரும் ஜோக்கர், திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களிடமும் பலத்த பாராட்டுக்களைப் பெற்றுவருகிறது. அந்தவகையில், இப்படத்தை பார்த்துவிட்டு நெகிழ்ந்து போன நடிகர் தனுஷ், ‘ஜோக்கர்’ பற்றி ட்வீட் செய்துள்ளார். அதில்,

‘‘ஜோக்கர்..- யாரை பாராட்டுவது என்றே தெரியவில்லை. இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர். கண்களில் கண்ணீர். தயவு செய்து பாருங்கள்!’’ என்று குறிப்பிட்டுள்ளார் தனுஷ்.

‘குக்கூ’ ராஜு முருகன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், காயத்ரி கிருஷ்ணா, ரம்யா பாண்டியன், மு.ராமசாமி, பவா செல்லதுரை உட்பட பலர் நடித்திருக்கும் ‘ஜோக்கர்’ படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. செழியன் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;