திருட்டு விசிடி குறித்து மக்கள் ஜனாதிபதியின் கருத்து!

‘ஜோக்கர்’ மக்கள் ஜனாதிபதியின் வேண்டுகோள்!

செய்திகள் 16-Aug-2016 5:52 PM IST VRC கருத்துக்கள்

‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவம் தயாரித்து, ராஜுமுருகன் இயக்கத்தில் சென்ற வெள்ளிக்கிழமை அன்று வெளியான படம் ‘ஜோக்கர்’. பத்திரிகையாளர்களின் பெரும் பாராட்டுக்களுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் சம்பந்தமான ஒரு வித்தியாசமான விளம்பரம் இப்போது இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த விளம்பரத்தில் இடம் பெற்றுள்ள விவரம் வருமாறு:

தோழர்களே!
திருட்டு வி.சி.டி.யில், இணைய தரவிறக்கத்தில் படம் பார்ப்பதும் ஊழலின், சுரண்டலின் இன்னொரு அங்கம் தான்.
ஒரு சினிமா பலநூறு தொழிலாளர்களின் வியர்வை, சில வருட உழைப்பு இதையும் தாண்டி திருட்டு வி.சி.டி.யில் படம் பார்க்கும் தோழர்கள், அதற்கான நியாயமான தொகையை கீழ்க் கண்ட வங்கி கண்க்கில் செலுத்திவிடுங்கள்.

THIS IS MAY ORDER
A/C NAME : DREAM WARRIOR PICTURES
A/C NO: 4211747273 IFSC CODE : KKBK0000462

(நீங்கள் அனுப்புகிற பணம் இந்த தேசத்தில் கழிவறை இல்லாத குடிமக்களுக்கு கழிவறை கட்டித்தர பயன்படுத்தப்படும்)

தங்கள் உண்மையுள்ள
மன்னர் மன்னன்
மக்கள் ஜனாதிபதி

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கைதி ட்ரைலர்


;