நிவின் பாலி பட இயக்குனர் இயக்கத்தில் ‘ரெமோ’ பாடல்!

‘ரெமோ’வின் ‘சிரிக்காதே…’ மியூசிக் வீடியோ அதிகாரபூர்வ அறிவிப்பு!

செய்திகள் 16-Aug-2016 2:12 PM IST VRC கருத்துக்கள்

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி வெளியாகவிருக்கும் படம் ‘ரெமோ’. பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தின் புரொமோஷன் வேலைகளில் ஈடுப்பட்டுள்ள படக்குழுவினர் நாளை மறுநாள் (ஆகஸ்ட்-18) இப்படத்திற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள ‘சிரிக்காதே…’ என்ற மியூசிக் வீடியோவை வெளியிடவுள்ளனர். இந்த மியூசிக் வீடியோவை, நிவின் பாலி கதாநாயகனாக நடிக்க, ஆர்.டி.ராஜா கதை எழுதி தயாரிக்கும் ‘24 ஏ.எம்.ஸ்டுடியோ’வின் மூன்றாவது படைப்பாக உருவாகவிருக்கும் படத்தை இயக்கும் பிரபு ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்த மியூசிக் வீடியோவை சோனி மியூசிக் நிறுவனம் தங்களது யு-ட்யூப் சேனல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் நாளை மறுநாள் வெளியிடவிருக்கிறது. அனிருத் இசையில் இப்பாடலை விக்‌னேஷ் சிவன் எழுதியிருக்க, அர்ஜுன் கனுங்கோ, ஸ்ரீநிதி வெங்கடேஷ் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். ஸ்வரூப் ஃபிலிப் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேற்கண்ட தகவல்களை ‘24 ஏ.எம்.ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் ‘ரெமோ’வை பிரம்மாண்டமாக தயாரித்து வரும் ஆர்.டி.ராஜா சார்பில் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;