‘இருமுகன்’ தயாரிப்பாளர் கையில் ‘ரெமோ’

சூடு பிடித்த ‘ரெமோ’ வியாபாரம்!

செய்திகள் 16-Aug-2016 12:42 PM IST VRC கருத்துக்கள்

‘24 ஏஎம் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘ரெமோ’ அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீசாகவிருக்கிறது. பாக்யராஜ் கண்ணன் இயக்கதில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் இப்படத்தின் வியாபார விஷயங்களும் சூடு பிடித்துள்ளது. ஏற்கெனவே இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை விற்றுவிட்ட நிலையில் இப்போது இப்படத்தின் கேரள விநியோக உரிமையும் விற்கப்பட்டு விட்டதாக தயாரிப்பு தரப்பினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

‘ரெமோ’வை கேரளம் முழுக்க வெளியிடும் உரிமையை விஜய்யின் ‘புலி’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும், தற்போது விக்ரம் நடிப்பில் ‘இருமுகன்’ படத்தை தயாரித்து வருபவருமான ஷிபு தமீன் வாங்கியுள்ளார். ஷிபு தமீன் தயாரித்துள்ள ‘இருமுகன்’ பாடல்கள் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ‘ரெமோ’வில் இடம் பெறும் ‘சிரிக்காதே…’ என்று துவங்கும் பாடலையும் நாளை மறுநாள் (ஆகஸ்ட்-18) வெளியிடவும் ‘ரெமோ’ படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;