விரைவில் ‘எந்திரன்’ 2ஆம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக்?

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘2.0’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் எப்போது?

செய்திகள் 16-Aug-2016 11:58 AM IST Chandru கருத்துக்கள்

ஒவ்வொரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரிலீஸ் செய்யப்படும் முன்பே, அப்படத்தின் போஸ்டரை ரசிகர்கள் தங்களது கைவண்ணத்தில் உருவாக்கி இணையதளங்களில் வெளியிட்டு வரும் சூழல் தற்போது ‘டிரென்ட்’ ஆக இருக்கிறது. அந்த வகையில், சமீபத்திய படங்களில் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட போஸ்டர்கள் மிக அதிக அளவில் வெளியிடப்பட்டது ‘எந்திரன்’ 2ஆம் பாகமான ‘2.0’ படத்திற்குத்தான். அதிலும் அத்தனை போஸ்டர்களும் பார்ப்பதற்கு ஒரிஜினல் போன்ற அற்புதமான டிசைன்களால் உருவாக்கப்பட்டிருந்ததுதான் ஆச்சரியம்.

லைக்கா புரொடக்ஷன்ஸ் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கி வருவதாகச் சொல்லப்படும் ‘2.0’ படத்தின் அதிகாரபூர்வ டைட்டில் வடிவமைப்பு, போஸ்டர் எப்படி இருக்கும் என்பதைக் காண இந்தியாவே காத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் செப்டம்பர் மாத இறுதியில் வெளியாக வாய்ப்பிருப்பதாக ஷங்கருக்கு நெருங்கிய வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது. அதோடு டீஸர் ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகலாம் என்றும் கூறுகிறார்கள். படம் அடுத்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;