‘ரெமோ’ படத்தின் வெளியீட்டு உரிமை வியாபாரம் தற்போது பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. படம் அக்டோபர் 7ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. ‘ரெமோ’ படத்தின் படப்பிடிப்பு, டப்பிங் வேலைகள் முடிவடைந்துவிட்டதால், மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடப்பு செப்டம்பரில் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. இப்படத்தில் தன் பங்கு வேலைகள் அனைத்தையும் இந்த வருடத்திற்குள் முடித்துவிட்டு 2017 ஜனவரி முதல் பொன்ராம் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவிருக்கிறார் சிவா.
ரெமோ, மோகன் ராஜா படங்களைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கவிருக்கும் படத்தையும் ஆர்.டி.ராஜாவின் ‘24 ஏஎம் ஸ்டுடியோஸ்’ நிறுவனமே தயாரிக்கிறது. இதுதவிர ஆர்.டி.ராஜா கதையில் நிவின் பாலி நடிக்கவிருக்கும் படம் ஒன்றையும் இந்நிறுவனமே தயாரிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என இரண்டு சூப்பர் ஹிட் வெற்றிகளைத் தந்துள்ளதால் பொன்ராம் இயக்கத்தில் நடிப்பதற்கு ரொம்பவே ஆர்வமாக இருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.
ஆர்.டி.ராஜாவின் ‘ 24 AM STUDIOS’ நிறுவனமும், கோட்டபடி ராஜேஷின் கே.ஜே.ஆர்.ஸ்டூடியோஸ் நிறுவனமும்...
ரெமோ, சீமராஜா ஆகிய படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர்.டி.ராஜாவின் ‘ 24 AM STUDIOS’...
சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெமோ, சீமராஜா முதலான படங்களை தயாரித்த நிறுவனம் ஆர்.டி.ராஜாவின் ‘ 24 AM...