கார்த்தியின் ‘காஷ்மோரா’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்?

கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவாகிவரும் ‘காஷ்மோரா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

செய்திகள் 16-Aug-2016 11:15 AM IST Chandru கருத்துக்கள்

‘ஜோக்கர்’ படத்தின் மூலம் மிகச்சிறந்த பெயரை சம்பாதித்திருக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட படைப்பான ‘காஷ்மோரா’ படம் வரும் தீபாவளியன்று உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் ஆகியோர் நடிக்கும் இப்படம் கிட்டத்தட்ட 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. ஒட்டுமொத்த படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து தற்போது படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை நள்ளிரவு (18ஆம் தேதி அதிகாலை 00.01) வெளியிடவிருப்பதாக நடிகர் கார்த்தி மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் அறிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து விரைவில் டீஸர் மற்றும் சந்தோஷ் நாராயணனின் இசையில் உருவாகி வரும் பாடல்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;