கமலின் ‘சபாஷ் நாயுடு’ பற்றிய லேட்டஸ்ட் தகவல்!

கமல் இயக்கி நடிக்கும் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது?

செய்திகள் 16-Aug-2016 11:07 AM IST Chandru கருத்துக்கள்

யாருமே எதிர்பார்த்திராத வண்ணம் திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக கமலின் காலில் அடிபட்டது. அதனைத் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்ட கமலை, குறைந்தபட்சம் ஒரு மாதமாவது ஓய்விலிருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். இதனால் பெட் ரெஸ்ட்டில் இருந்து வந்த கமல், ஆகஸ்ட் முதல் வாரத்தில் இரண்டு பேரின் உதவியுடன் எழுந்து நடக்கத் துவங்கினார். பின்னர், தற்போது கடந்த ஒரு வார காலமாக சிறிய அளவிலான உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

கமலின் உடல்நிலை வேகமாக தேறி வருவதால், ‘சபாஷ் நாயுடு’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 2வது வாரத்தில் துவங்க வாய்ப்பிருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்திருக்கிறது. இப்படத்தின் முதல் ஷெட்யூலை அமெரிக்காவில் முடித்துவிட்டுத் திரும்பியிருக்கும் ‘சபாஷ் நாயுடு’ படக்குழு கிட்டத்தட்ட 42 நிமிட காட்சிகளுக்கான எடிட்டிங்கையும் முடித்துவிட்டார்களாம். அடுத்தகட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடாரம் கொண்டான் - ட்ரைலர்


;