கார்த்திக் சுப்புராஜ் அசிஸ்டென்ட் இயக்கும் ‘54321’

அறிமுக இயக்குனர் ஏ.ராகவேந்திர பிரசாத் இயக்கும் ‘54321’

செய்திகள் 16-Aug-2016 10:24 AM IST VRC கருத்துக்கள்

கார்த்திக் சுப்புராஜின் ‘பீட்சா’ படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய ஏ.ராகவேந்திர பிரசாத் ‘54321’ என்ற பெயரில் ஒரு படத்தை இயக்குகிறார். 5 மனிதர்கள், 4 வாழ்க்கை முறைகள், 3 கொலைகள், 2 மணிநேரம், 1 பழிவாங்குதல்…. இந்த ஐந்தும் ஒன்று சேரும் கதையை திரைக்கதை வடிவமாக அமைத்து உளவியில் சார்ந்த த்ரில்லர் படமாக இதனை இயக்குகிறார் ஏ.ராகவேந்திர பிரசாத். இப்படத்தில் கதையின் நாயகர்களாக ஷபீர், அர்வின் நடிக்கின்றனர். கதாநாயகியாக பவித்ரா நடிக்கிறார். இவர்களுடன் ரவி ராகவேந்தர், ரோகிணி, ஜெயகுமார், ‘பசங்க’ சிவகுமார், ரவி வெங்கட்ராமன் ஆகியோரும் நடிக்கின்றனர். ‘மெயின் ஸ்ட்ரீம் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ஜி.வி.கண்ணன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜோஸ்வா ஸ்ரீதர் இசை அமைக்கிறார். பானுமுருகன் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்கத்தை ராம் கவனிக்க, எம்.ஆர்.ரஜிஷ் படத்தொகுப்பு செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

54321 - டிரைலர்


;