தயாரிப்பாளராகும் இசை அமைப்பாளர்!

ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் பிரகாஷ் நிக்கி!

செய்திகள் 16-Aug-2016 9:59 AM IST VRC கருத்துக்கள்

இசையமைப்பாளர்கள் ஜி.வி. பிரகாஷ்குமார், விஜய் ஆண்டனியை தொடர்ந்து இசை அமைப்பாளர் பிரகாஷ் நிக்கியும் திரைப்பட தயாரிப்பாளராகிறார். ‘ரௌத்திரம்’, ‘களம்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த பிரகாஷ் நிக்கி, ‘ ஸ்வதீப் சினிமா’ என்ற நிறுவனத்துடன் இணைந்து இன்னும் பெயரிடப்படாத ஒரு படத்தை தயாரிக்கிறார்.

புதுமுகங்கள் நடிக்கவிருக்கும் இத்திரைப்படத்தை புதுமுக இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி இயக்குகிறார். ராஜா டி.எஃப்.டி. ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். பிரகாஷ் நிக்கி இசையமைக்கிறார். இப்படத்தின்நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;