‘பாகுபலி-2’ படத்தை தமிழகத்தில் வெளியிடப் போவது யார்?

‘பாகுபலி-2’ படத்தின் தமிழக விநியோக உரிமையை கைபற்றியது யார்?

செய்திகள் 16-Aug-2016 9:49 AM IST VRC கருத்துக்கள்

உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம பாகமான் ‘பாகுபலி-2’ அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியிடப்படுகிறது. இப்படத்தை தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை ‘கே.புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவன அதிபர் எஸ்.என். ராஜராஜன் பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் தமிழகத்தில் வெளியிடும் கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமே தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிநாடுகளிலும் வெளியிடுகிறது. ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ரணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் முதலானோர் நடித்து வரும் ‘பாகுபலி-2’வின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அத்துடன் இந்நிறுவனம் ராணா, சத்யராஜ், ரெஜினா, நாசர், கருணாஸ் ஆகியோர் நடிக்க, சத்யசிவா இயக்கத்தில், யுவன்சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் ‘மடைதிறந்து’ என்ற பெயரில் தமிழிலும், ‘1945’ என்ற பெயரில் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் பிரம்மாண்ட படமொன்றையும் தயாரித்து வருகிறது. இந்த இரண்டு பிரம்மாண்ட படங்களுடன் திரைத்துறைக்கு வந்திருக்கும் ‘கே.புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் இன்னும் பல பிரம்மாண்ட படங்களை தயாரிக்க உள்ளது என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சாஹோ டீஸர்


;