பாரதிராஜா உதவியாளர் இயக்கும் ‘வளையல்’

’வளையல்’ படத்துடன் களமிறங்கும் பாரதிராஜா உதவியாளர்!

செய்திகள் 16-Aug-2016 9:52 AM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பண்யாற்றிய குரு சேகரா இயக்கும் படம் ‘வளையல்’. ‘பி.ஆர்.மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் சார்பில் பி.ஆர்.காளியப்பன் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகனாக சக்தி சிவன் நடிக்க, கதாநாயகியாக பாவ்யாஸ்ரீ நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கேரக்டர்களில் மனோஜ்.கே.பாரதி, சத்யஜித் நடிக்கின்றனர்.

‘‘கதைப்படி கதாநாயகி கேட்கும் திறன் படைத்த ஊமை! கதாநாயகன் கதாநாயகி மீது காதல் வயப்படும்போதெல்லாம் தான் ஊமை என்னும் உண்மையை சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் கதாநாயகனுக்கு தெரியப்படுத்தாமல் மறைக்கிறாள். ஆனால் ஒரு நாள் கதாநாயகனுக்கு உண்மை தெரியவருகிறது. அதன் பின்னர் நடக்கும் சுவாரஸ்யமான சம்பங்களே ’வளையல்’’ என்கிறார் இப்படத்தை இயக்கி வரும் குரு சேகரா.

டி.எஸ்.முரளிசுப்பிரமணி இசை அமைக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை சிவா.ஜி. ஏற்றுள்ளார். கலை இயக்கத்தை மதன் கவனிக்கிறார். படத்தொகுப்பை ஃபாசில் கவனிக்கிறார். வேகமாக வளர்ந்து வருகிறது ‘வளையல்’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;