அப்புக்குட்டி கதாநாயகனாகும் ‘காகித கப்பல்’

‘கஜேந்திரா’, ‘பிதாமகன்’ தயாரிப்பாளரின் காகித கப்பல்!

செய்திகள் 13-Aug-2016 11:49 AM IST VRC கருத்துக்கள்

‘மறந்தேன் மெய் மறந்தேன்’, ‘சொல்லித்தரவா’, ‘அன்பா அழகா’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.சிவராமன் இயக்கும் படம் ‘காகித கப்பல்’. ‘எவர் கிரீன் மூவி இன்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் ‘கஜேந்திரா’, ‘என்னம்மா கண்ணு’, ‘பிதாமகன்’ உட்பட பல வெற்றிப் படங்களை தயாரித்த வி.ஏ.துரை தயாரிக்கும் இப்படத்தில் சிவபாலன் என்கிற அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடிக்கிறார். புதுமுகம் டில்லிஜா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஒளிப்பதிவை வெங்கி தர்ஷன் கவனிக்க, நிஜாம் இசை அமைக்கிறார்.

‘காகித கப்பல்’ குறித்து இயக்குனர் சிவராமன் கூறும்போது, ‘‘9 வயதிலிருந்து குப்பை சேகரித்து, அதன் மூலம் வரும் பணத்தை சேமித்து வைத்து உழைப்பால் உயர்ந்த நேர்மையானவன் இப்படத்தின் கதாநாயகன். கதாநாயகியாக வரும் படித்த பெண்மணி இவரது வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள்! நிர்பந்தத்தின் காரணமாக இருவரும் மணம் முடிக்கின்றனர். இருவரும் தரமான வாழ்கை வாழ்ந்து வந்தனர். இப்படியிருக்க படித்த கதாநாயகியின் ஒரே ஒரு பேராசையால் அவர்களது வாழ்க்கை எப்படி காகித கப்பலாகிறது என்பது தான் படம்’’ என்கிறார் இயக்குனர்! இறுதிகட்ட பணிகளில் இருந்து வரும் இப்படம் விரைவில் வெளியாகுமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தெரு நாய்கள் - டிரைலர்


;