‘ரெமோ’, ‘கவலை வேண்டாம்’, ‘போகனு’டன் களமிறங்கும் தேவி!

சிவகார்த்திகேயன், ஜீவா, ஜெயம் ரவியுடன் கலமிறங்கும் பிரபு தேவா!

செய்திகள் 13-Aug-2016 10:44 AM IST VRC கருத்துக்கள்

விஜய் இயக்கத்தில் பிரபு தேவா, தமன்னா இணைந்து நடித்துள்ள படம் ‘தேவி’. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகியிருக்கும் இப்படத்தை அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, அது குறித்த அதிகாரபூர்வ தகவலையும் வெளியிட்டிருந்தனர். ஆனால் ‘தேவி’ அடுத்த மாதம் 9-ஆம் தேதி வெளியாகாதாம்! மாறாக இன்னும் ஒரு மாதம் தள்ளி, அதாவது விநாயக சதுர்த்தியை முன்னிட்டு அக்டோபர் மாதம் 9 ஆம் தேதிக்கு ‘தேவி’யின் ரிலீஸ் தேதியை குறித்திருக்கிறார்கள். இந்த தகவலை இப்படத்தை தயாரித்து வரும் பிரபு தேவாவின் ‘பிரபு தேவா ஸ்டுடியோஸ்’ நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதே தினம் தான் சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’, ஜீவாவின் ‘கவலை வேண்டாம்’, ‘ஜெயம்’ ரவியின் ‘போகன்’ முதலான படங்களுக்கும் ரிலீஸ் தேதியை குறித்திருக்கிறார்கள். ஆக, இந்த வருட விநாயக சதுர்த்தி சினிமா ரசிகர்களை பொறுத்தவரையில் ஸ்பெஷலாக அமையப் போகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;