சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் ‘கட்டப்பாவை காணோம்’ படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இயக்குனர் அறிவழகனிடம் உதவியாளராக பணிபுரிந்த மணிசேயோன் இயக்கி வரும் இப்படம் தமிழ் சினிமாவில் முதன் முதலாக ஒரு வாஸ்து மீனை முக்கிய கதாபாத்திரமாக வைத்து எடுக்கப்பட்டும் படமாகும்! இத்துடன் இப்படத்தில் வேறு நான்கு சுவாரஸ்ய விஷயங்களும் இருக்கிறது. முதல் விஷயம் இப்படத்திற்காக நடிகர் விஜய்சேதுபதி குரல் கொடுத்திருக்கிறார் என்பது! இரண்டாவதாக தற்போது விஜய்யின் 60 ஆவது படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து அரும் குழந்தை நட்சத்திரம் மோனிகா சிபிராஜுடன் முக்கிய கேரடக்டரில் நடித்திருப்பது! மூன்றாவதாக தன்னுடைய தனித்துவமான குரலால் இசை பிரியர்களை தன் வசப்படுத்தி வைத்திருக்கும் சிட் ஸ்ரீரான் ஒரு பாடலை பாடியிருப்பது! நான்காவது விஷயம் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ போன்ற படங்களின் மூலம் புகழபெற்ற ‘மைம்’ கோபி இப்படத்தில் மெயின் வில்லனாக நடித்திருப்பது! இப்படி பல சுவாரஸ்ய விஷயங்களுடன் உருவாகி வரும் ‘கட்டப்பாவை காணோம்’ விரைவில் வெளியாகாவிருக்கிறது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...
சென்ற வாரம் ‘டகால்டி’, ‘நாடோடிகள்-2’, ‘ உற்றான்’, ‘மாயநதி’ ஆகிய நான்கு நேரடித்தமிழ் படங்கள்...
அசோக் செல்வன், ரித்விகா சிங் இணைந்து நடிக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம்...