‘அபி & அபி’யிடம் ஜீவாவின் கவலை வேண்டாம்!

ஜீவா படத்தை வாங்கிய அபி & அபி!

செய்திகள் 13-Aug-2016 9:59 AM IST VRC கருத்துக்கள்

ஜீவா, காஜல் அகர்வால நடித்து வருகிற அக்டோபர் 7ஆம் தேதி ரிலீசாகவிருக்கிற படம் ‘கவலை வேண்டாம்’. ‘யாமிருக்க பயமே’ படப் புகழ் டீகே இயக்கியிருகும் இப்பத்தை ‘ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். காமெடி கலந்த காதல் படமாக உருவாகியுள்ள இப்படத்தினை வாங்க விநியோகஸ்தர்களுக்குள் பலத்த போட்டி நிலவி வந்ததாக குறப்படுகிறது! இந்நிலையில் இப்படத்தின் விநியோக உரிமையை அபினேஷ் இளங்கோவனின் ‘அபி & அபி’ நிறுவனம் கைபற்றியுள்ளது.

"காமெடி கலந்த காதல் கதைக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு கிடைக்கும். ஒரு படத்தின் வெற்றிக்கு கதைக்களம் முக்கிய காரணமாக இருந்தாலும், அத்துடன் சிறந்த நடிகர்கள், மனதை மயக்கும் இசை, காண்போரை பிரமிக்க வைக்கும் காட்சி அமைப்புகள் முதலான விஷயங்களும் இருக்க வேண்டும். ‘கவலை வேண்டாம்’ படத்தில் அத்தனை விஷயங்களும் ஒன்றாக இணைந்திருப்பதால் இது நிச்சயமாக வெற்றிப் படமாக அமையும் என்ற நம்பிக்கையில் இப்படத்தின் விநியோக உரிமையை வாங்கியிருக்கிறோம்’’ என்கிறார் அபினேஷ் இளங்கோவன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொரில்லா - ட்ரைலர் 1


;