அப்பா, மகன் உறவை சொல்லும் திரி!

‘திரி’யில் இணையும் அஸ்வின், சுவாதி!

செய்திகள் 11-Aug-2016 2:01 PM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் அசோக் அமிர்தராஜ் இயக்கி வரும் படம் ‘திரி’. ‘சீஷோர் கோல்ட் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ஏ.கே.பாலமுருகன், ஆர்.பி.பாலகோபி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் அஸ்வின் கக்கமனு, சுவாதி ரெட்டி கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். அஸ்வின் அப்பாவாக ஜெயபிர்காஷ், அம்மாவாக அனுபமா குமார் நடிக்க, வில்லனாக ஏ.எல்.அழகப்பன் நடிக்கிறார். இவர்களுடன் கருணாகரன், சென்ட்ராயன், டேனியல் ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி புகழ் அஜீஸ். ‘சதுரங்க வேட்டை’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் இசை அமைப்பாளர் புதுமுகம் அஜீஸ் என்றாலும், ஒரு பாடலுக்கு எஸ்.எஸ். தமனும் இசை அமைத்துள்ளார்.

‘‘நாம் எவ்வளவு தான் வாழ்க்கையில் வெற்றிகளை குவித்தாலும் நம்முடைய தாய், தந்தை அதை பார்க்க இல்லையென்றார்ல் அந்த வெற்றிகள் யாவும் முழுமை பெறாது’’ என்ற கருத்துடன் அப்பா, மகன் உறவை சொல்லும் படமாம் ‘திரி’. இறுதிகட்ட பணிகளில் இருந்து வரும் ‘திரி’யை ஆடுத்த மாதம் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள் படக்குழுவினர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கேம் ஓவர் ட்ரைலர்


;