ஜிப்ரான் இசை பயணத்தை கொடி அசைத்து துவக்கி வைக்கும் சூர்யா!

சென்னை டு சிங்கப்பூர் பயணத்தை துவக்கி வைக்கும் சூர்யா!

செய்திகள் 11-Aug-2016 1:06 PM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் அப்பாஸ் அக்பர் இயக்கும் படம் ‘சென்னை டு சிங்கப்பூர்’. இப்படத்தில் புதுமுகங்கள் கோகுல் ஆனந்த், அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ள இப்படத்தின் 6 பாடல்களை புதுமையான முறையில் ‘சென்னை டு சிங்கப்பூர்’ சாலை வழியாக சென்று 6 இடங்களில் வெளியிடவிருக்கிறார்கள் என்ற தகவலை சில நாட்களுக்கு முன் நமது இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம். இந்த இசை பயணத்தை நாளை (12-8-16) சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெறவிருக்கும் இப்பட விழாவில் நடிகர் சூர்யா கொடி அசைத்து துவக்கி வைக்கிறார். சென்னையில் ஆரம்பித்து பூட்டான், மியான்மர், தாய்லாந்த், மலேசியா நாடுகள் வழியாக பயணமாகி இறுதியில் சிங்கப்பூரில் பாடல் வெளியீடு முடிவடைகிறது. ‘சிங்கப்பூருக்கு சாலை வழியாகவும் செல்ல முடியும் என்பதை இப்படத்தின் பாடல் வெளியீட்டு மூலம் பலருக்கும் தெரிய வரும்’ என்கிறார் இசை அமைப்பாளர் ஜிப்ரான்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;