‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தயாரித்த ‘மெட்ராஸ் என்டர்பிரைசஸ்’ எஸ்.நந்தகோபால் தற்போது விக்ரம் பிரபு நடிப்பில் ‘வீரசிவாஜி’ படத்தை தயாரித்து வருவதுடன், விஷால் நடிப்பில் ‘கத்தி சண்டை’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறார். சுராஜ் இயக்கும் ‘கத்தி சண்டை’யில் விஷாலுடன் கதாநாயகியாக தமன்னா நடிக்க, காமெடி கேரக்டர்களில் வடிவேலு, சூரி நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜெகபதி பாபு, தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் ஆகியோரும் நடிக்கின்றனர். ‘எலி’ படத்தில் கதாநாயகனாக நடித்ததை தொடர்ந்து மீண்டும் இப்படத்தின் மூலம் காமெடி கேரக்டர்களில் நடிக்க களமிறங்கியுள்ள வடிவேலு, இப்படத்தில் சீரியஸான ஒரு சைக்யாட்ரிஸ்ட் கேரக்டரில் நடிக்கிறார். இவரது கேரக்டர் பெயர் ‘டாக்டர் பூத்ரி’ என்பதாகும். இப்படம் குறித்து இயக்குனர் சுராஜ் கூறும்போது,
‘‘விஷால் நடித்த படங்களிலேயே இந்த படம் அதிக பொருட் செலவில் தயாராகி வருகிறது. இப்படத்தின் பாடல் காட்சிகளுக்காகவும், சண்டை காட்சிகளுக்காகவும் கலை இயக்குனர் உமேஷ் குமார் கைவண்ணத்தில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு, அதில காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. முதல் பாதியில் சூரியும் இரண்டாம் பாதியில் வடிவேலுவும் காமெடியில் கலக்குவார்கள். பக்கா கமர்ஷியல், ஆக்ஷன் காமெடி படமாக உருவாகி வரும் இப்படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளது’’ என்றார்.
இப்படத்திற்கு இசை அமைக்கும் பொறுப்பை ‘ஹிப் பாப் தமிழா ஆதி ஏற்றுள்ளார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை நா.முத்துக்குமார், ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி எழுதுகிறார்கள்.
ஸ்ரீநகர் ஜம்மு நெடுஞ்சாலையில் புல்வாமாவில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாகுதலில் 40-க்கும் மேற்பட்ட...
நடிகர் விஜயகாந்தின் திரையுலக வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்தவர் மறைந்த இப்ராகிம் ராவுத்தர்! இவரது...
இளையராஜாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, ‘இளையராஜா 75’ என்ற பெயரில் மிகப்பெரிய பாராட்டுவிழா ஒன்றை...