‘மங்காத்தா 2’ பற்றிய லேட்டஸ்ட் தகவலை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அஜித்தில் நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான ‘மங்காத்தா’ படத்தின் 2ஆம் பாகம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு

செய்திகள் 11-Aug-2016 11:49 AM IST Chandru கருத்துக்கள்

கிட்டத்தட்ட 5 வருடங்கள் ஆகிவிட்டது.... ஆனால் இன்னமும் ‘தல’ ரசிகர்கள் மந்திரம்போல் உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள் ‘மங்காத்தா டா...’ என! அந்தளவுக்கு அஜித்தின் கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது ‘மங்காத்தா’. அதோடு இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும் ‘ஸ்டார் டைரக்டர்’ என்ற பெயரையும் வாங்கித் தந்தது இப்படம். இப்படத்தின் க்ளைமேக்ஸை யாரும் எதிர்பார்க்காத வண்ணம், வித்தியாசமான ட்விஸ்ட்டுடன் முடிந்திருந்தார் வெங்கட். இதனால், இப்படத்தின் 2ஆம் பாகம் கண்டிப்பாக உருவாகும் என அப்போதே பேசப்பட்டது. அதை அவ்வப்போது இயக்குனர் வெங்கட் பிரபுவும் பேட்டிகளில் குறிப்பிட்ட வண்ணம்தான் உள்ளார்.

இப்போது ‘மங்காத்தா 2’ பற்றி லேட்டஸ்ட்டாக வாரஇதழ் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார் வெங்கட் பிரபு. அதில்... ‘மங்காத்தா பார்ட் 2வை இயக்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. அது இரண்டாம் பாகமாகவும் இருக்கலாம்... அல்லது புதிய கதையாகவும் இருக்கலாம்!’ என குறிப்பிட்டிருக்கிறார். தற்போது ‘சென்னை 28’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துவரும் வெங்கட், சிம்புவை வைத்து ‘பில்லா 2018’ படத்தை எடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;