காதலியை விட்டு கொடுக்கலாம்! நண்பனை விட்டு கொடுக்க முடியாது! – சிம்பு

கிரிக்கெட் டீம் அறிமுகவிழாவில் சிம்பு ஜாலி பேச்சு!

செய்திகள் 11-Aug-2016 11:43 AM IST VRC கருத்துக்கள்

விரைவில் ‘தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி’ நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியில் ‘மதுரை சூப்பர் ஜெயின்டஸ் அணி’யை ஒருங்கிணைத்திருப்பதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார் திரைப்பட தயாரிப்பாளர் துரை தயாநிதி. இந்த அணியை நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்து வைத்தார் பிரபல கிரிக்கெட் வீர்ரான வீரேந்தர் ஷேவாக்.
இந்த அணிக்காக "லந்தக்கூட்டு...அலும்ப ஏத்து..., அலப்பறையா... ஆட்டம் போட்டு..." என்ற புரொமோஷன் பாடலை உருவாக்கியுள்ளார்கள். இப்பாடலை ‘நெருப்புடா..’ பாடல் புகழ் அருண் ராஜா காமராஜ் எழுத, எஸ்.எஸ்.தமன் இசையில், சிம்பு பாடியிருக்கிறார். இந்த பாடலையும் நேற்று அறிமுகப்படுத்தி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் சிம்பு, எஸ்.எஸ்.தமன், இசை அமைப்பாளர் அனிருத், அருண் ராஜா காமராஜ், தயாநிதி அழகிரி உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது சிம்பு பேசும்போது,

‘‘ரயில் பயணத்தில் வித் அவுட் என்னும் ஒன்று இருக்கிறது அன்பதை எனக்கு உணர்த்தியது கிரிக்கெட் தான். மாநில அளவில் நான் பங்கேற்க இருந்த ஒரு கிரிக்கெட் போட்டிக்காக ரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் கூட நான் பயணித்திருக்கிறேன். அந்த அளவிற்கு கிரிக்கெட் மீது எனக்கு ஈர்ப்பு இருக்கிறது. புகழ் பெற்ற கிரிக்கெட் வீர்ர் வீரேந்தர் ஷேவாகுடன் நான் இந்த மேடையில் நிற்பேன் என்று சிறிதளவும் எதிர்பார்த்ததில்லை. இப்படி எனக்கு ஒரு வாய்ப்பை அளித்த என் நெருங்கிய நண்பர் தயாநிதி அழகிரிக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை பொறுத்தவரையில் நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன்! காதலியை கூட விட்டு கொடுக்கலாம். ஆனால் நண்பனை ஒரு போதும் விட்டு கொடுக்க மாட்டேன்! அதனால் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். ‘ஆட்டைக்கு’ ரெடியாக இருக்கும் ‘மதுரை சூப்பர் ஜெயின்ட அணி’ வெற்றிபெற என் வாழ்த்துக்கள்… சிறப்பு…’’ என்றார் சிம்பு தனக்கே உரிய ஸ்டைலில்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;