மூன்று வருடங்களுக்கு முன்பு, விஷாலின் ‘சமர்’ படமும், கார்த்தியின் ‘அலெக்ஸ் பாண்டியன்’ படமும் பொங்கலன்று ஒரே நேரத்தில் வெளியானது. அதே கூட்டணி இப்போது வரும் தீபாவளிக்கும் களத்தில் குதிக்கிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடிக்கும் ‘காஷ்மோரா’ படம் தீபாவளி அன்று வெளியாகிறது என கடந்த சில வாரங்களுக்கு முன்பே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தீபாவளிக்கு இன்னும் 2 மாதங்களுக்கு மேல் இருந்தபோதிலும், பெரிய வசூல் குவிக்கக்கூடிய சாத்தியமுள்ள நாள் என்பதால் இப்போதே அந்த நாளை கோலிவுட் கூர்ந்து கவனிக்கத் துவங்கியிருக்கிறது.
காஷ்மோராவைத் தொடர்ந்து இப்போது விஷாலின் ‘கத்தி சண்டை’ படமும் தீபாவளியன்று வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி ஆகியோர் நடிக்கும் இப்படத்தை ‘மெட்ராஸ் என்டர்பிரைசஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் படத்தை வெளியிடுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனமும் ‘விவேகானந்தா...
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...
‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘குண்டு’. இந்த படத்தை தொடர்ந்து தினேஷ் நடிக்க...