‘முடிஞ்சா இவன புடி’யிலும் தொடரும் ‘லிங்கா’ பிரச்சனை!

தொடரும் ‘லிங்கா’ பட பிரச்சனை!

செய்திகள் 11-Aug-2016 11:02 AM IST VRC கருத்துக்கள்

‘லிங்கா’ படத்தை தொடர்ந்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள படம் ‘முடிஞ்சா இவன புடி’. ‘லிங்கா’வை தயாரித்த ‘ராக்லைன்’ வெங்கடேஷின் நணபரும், கன்னடத்தில் பல திரைப்படங்களை தயாரித்தவருமான ராம்பாபு தனது ‘ராம்பாபு புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் நாளை (12-8-16) ரிலீசாகவிருக்கிற நிலையில் இன்னும் முடிவுக்கு வராத ‘லிங்கா’ பட விநியோக பிரச்சனையை முன் நிறுத்தி ‘முடிஞ்சா இவன புடி’ படத்தை தமிழகத்தில் வெளியிடுவதை தடுத்து நிறுத்துகிறார் ‘தென்னிந்திய திரைப்பட வரத்தக சபை’யின் செயலாளர் அருள்பதி என்ற குற்றாச்சாட்டை வைத்துள்ளார் ‘முடிஞ்சா இவன புடி’ படத்தின் தயாரிப்பாளர் ராம்பாபு! இது சம்பந்தமாக நேற்று மாலை சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் ராம்பாபு கூறியதாவது:

‘‘எனக்கும் ‘லிங்கா’ பட பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ‘லிங்கா’ படத்தை தயாரித்த ‘ராக்லைன்’ வெங்கடேஷ் அவர்கள் எனது 20 வருட கால நண்பர். அவர் எனக்கு நிறைய உதவிகளை புரிந்துள்ளார். அந்த முறையில் தான் ‘முடிஞ்சா இவன புடி’ விளமரங்களில் ‘ராக்லைன்’ வெங்கடேஷ் வழங்கும் என்று போட்டிருக்கிறேன். மற்றபடி அவருக்கும் இப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது முழுக்க முழுக்க என் சொந்த பணத்தை வைத்து தயாரித்த படமாகும். அப்படியிருக்க, ‘முடிஞ்சா இவன புடி’ படத்தை ‘லிங்கா’ பட பிரச்சனையை முன் வைத்து பிரச்சனைகள் செய்து வருகிறார் அருள்பதி அவர்கள். பிரச்சனைகளை தீர்த்து வைக்க நானும் ரெடியாகி அவரை ஃபோனில் தொடர்பு கொண்டால் அவர் ஃபோனை எடுப்பதில்லை. நேரில் சந்தித்து பேசி பிரச்சனையை தீர்க்கலாம் என்று அவர் அலுவலகத்திற்குச் சென்றால அவர் என்னை சந்திப்பதை தவிர்த்து விடுகிறார். தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தால் அவர்களும் இந்த பிரச்சனையை காதில் வாங்கி கொள்ளவில்லை.

’லிங்கா’ பட பிரச்சனையை பொறுத்தவரையில் ‘ராக்லைன்’ வெங்கடேஷ் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி முடிவெடுத்தபடி 95 சதவிகித பணத்தையும் செட்டில் செய்து விட்டார். மீதி 5 சதவிகிதம் தான் கொடுக்க வேண்டும். இந்த 5 சதவிகித தொகையை கொடுக்க அவர் தயாராக இருக்கிறார். ஆனால் அந்த பணம் யாரிடம் கொடுப்பது என்று தெரியவில்லை. முழு பணமும் கொடுக்கப்பட்டு விட்டால் அது சம்பந்தமான கடிதம் தரவேண்டும். அதற்கும் ஆளில்லை. இந்த பிரச்சனையில் ‘வேந்தர் மூவீஸ்’ மதன் அவர்களும் சம்பந்தப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் இப்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. நிலைமை இப்படி இருக்க இந்த பிரச்சனையில் எந்த வகையிலும் சம்பந்தமில்லாத என் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்படுத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது? என் படத்தை நான் வருகிற 12-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளேன். திட்டமிட்டபடி என் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஒருவேளை சதி செய்து என் படத்தை வெளியிடுவதில் சிக்கல்களை, பிரச்சனைகளை ஏற்படுத்துமானால் அருள்பதி மீது நான் சட்டப்படியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன்’’ என்றார்.

WATCH FULL VIDEO

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;