‘பேரழகன்’ இயக்குனர் காலமானார்!

திடீரென்று காலமான ‘பேரழகன்’ இயக்குனர்!

செய்திகள் 10-Aug-2016 12:32 PM IST VRC கருத்துக்கள்

ஏவி.எம்.புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து சூர்யா, ஜோதிகா இரட்டை வேடங்களில் நடித்த படம் ‘பேரழகன்’. இந்த படத்தை இயக்கியவர் சசி சங்கர். கேரளாவை சேர்ந்த இவர் இன்று காலை தனது வீட்டில் திடீரென்று காலமானார். இவரது மரணத்துக்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ‘குஞ்சிக்கூன்ன’ படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகிய படம் தான் ‘பேரழகன்’. இப்படத்தை இயக்கியதோடு தமிழில் இவர் இயக்கிய மற்றொரு படம் ‘பகடை பகடை’. தமிழில் இரண்டு படங்களை இயக்கிய இவர் மலையாளத்தில் இதுவரை ஏழு படங்களை இயக்கியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;