சிம்புவின் புதுப்படம் எப்போதுமே அதிரடியாகத் துவங்கும், மளமளவென வளரும்... ஆனால் எப்போது படத்தின் வேலைகள் முடியும்..? எப்போது படம் ரிலீஸாகும்? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக கடைசியாக மாறும். இதுதான் அவரின் சமீபத்திய படங்களின் சோகமான சாதனை. அந்த சாதனைக்கு கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘அச்சம் என்பது மடமையடா’ படமும் தப்பவில்லை. 2013ல் ஆரம்பிக்கப்பட்டு, அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்திற்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் படப்பிடிப்பு துவங்கி மளமளவென வளர்ந்தது இப்படம். யார் கண்பட்டதோ தெரியவில்லை... கடைசி நேரத்தில் ‘தள்ளிப் போகாதே’ பாடலின் படப்பிடிப்பிற்கு தள்ளிக்கொண்டே போனது. அதனால் ரிலீஸ் தேதியும் தள்ளியது.
வாரஇதழ் ஒன்றில் ‘சிம்புக்காக காத்திருக்கிறேன்’ என கௌதம் பேட்டி கொடுக்க, ‘கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்தால் உடனே நடிக்க ரெடி’ என சிம்பு பதில் அறிக்கைவிட என பரபரப்புக் கிளம்பியதுதான் மிச்சம். ‘தள்ளிப்போகாதே...’ பாடல் படமாக்கப்பட்டதோ, இல்லையோ, ஆனால் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார் இயக்குனர் கௌதம். செப்டம்பர் 9ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிப் படங்களையும் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்புசமீபத்தில் தாய்லாந்த் -...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...