மாடர்ன் பெண்ணாக களமிறங்கும் ‘பிச்சைக்காரன்’ நாயகி!

சாதனா டைட்டஸுக்கு உதவிய ‘கயல்’ சந்திரன்!

செய்திகள் 10-Aug-2016 11:04 AM IST VRC கருத்துக்கள்

‘பிச்சைக்காரன்’ படத்தில் ‘பீட்சா’ கடையில் வேலை செய்யும் பெண்ணாக நடித்த சாதனா டைட்டஸ் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்தில் மாடர்ன் பெண்ணாக நடிக்கிறார். ‘2 MOVIE BUFF’ என்ற நிறுவனமும் 'ACROSS FILMS' என்ற நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ‘கயல்’ சந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் நடிப்பது குறித்து சாதனா டைட்டஸ் கூறும்போது,

‘‘எந்த ஒரு விஷயத்தையும் ஜாலியாக எடுத்துக் கொள்ளும் ஒரு மாடர்ன் பெண்ணாக இப்படத்தில் நடித்து வருகிறேன். இதுவரை நான் பழக்கப்படாத ஒரு வேடம் என்பதால் எனக்கு இந்த கேரக்டர் பற்றி தெரிந்துகொள்ள சிறிது காலம் தேவைப்பட்டது. ஒரு மாடர்ன் பெண்ணின் நடை, உடை, பாவனை, மற்றும் பேசும் விதம், உடைகள் அணியும் விதம் எப்படி இருக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த விஷயத்தில் என் கூட இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் ‘கயல்’ சந்திரன் அவர்கள் பல அறிவுரைகளை தந்து சிறப்பாக நடிக்க பக்கபலமாக இருந்து வருகிரார். இது எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.எங்கள் கூட்டணியில் உருவாகி வரும் இப்படம் நிச்சயம் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது’’ என்கிறார் சாதனா டைட்டஸ்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொலைகாரன் -டீஸர்


;