ரஹ்மான் டிரைலரை வெளியிடும் ரஹ்மான்!

16 மணி நேரத்தில் நடக்கும் கதை துருவங்கள் பதினாறு!

செய்திகள் 10-Aug-2016 10:15 AM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் கார்த்திக் நரேன் எழுதி, இயக்கும் படம் ‘துருவங்கள் பதினாறு’. இப்படத்தில் கதையின் நாயகனாக போலீஸ் அதிகாரியாக ரஹ்மான் நடித்துள்ளார். ‘ஆஸ்கார் வின்னர்’ என்ற பட நிறுவனம் சார்பில் தயாராகி வரும் இப்படத்தில் கதாநாயகி, இரட்டை அரத்த வசனங்கள், பாடல்கள், காதல் காட்சிகள் போன்ற வழக்கமான விஷயங்கல் எதுவும் இல்லையாம்! கதாநாயகனாக நடிக்கும் ரஹ்மானுடன் கதையில் சில புதுமுகங்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் மட்டும் பயணமாகுமாம். 16 மணி நேரத்தில் நடப்பது மாதிரி இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது என்றும் இப்படம் தமிழி சினிமாவில் ஒரு புதிய முயற்சியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இறுதிகட்ட பணிகளில் இருந்து வரும் இப்படத்தின் டிரைலரை சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட்-15) மாலை 5 மணிக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடுகிறார். இப்படம் சமப்ந்தமான கூடுதல் விவரங்கள் டிரைலர் வெளியீட்டுக்கு பிறகு தெரிய வரும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;