ஜி.வி.படத்திற்காக வாள் சண்டை பயிற்சி பெறும் சரத்குமார்!

ஜி.வி.பிரகாஷுடன் கை கோர்க்கும் சரத்குமார்!

செய்திகள் 10-Aug-2016 10:11 AM IST VRC கருத்துக்கள்

சரத்குமார், ‘காஞ்சனா’ படத்தில் ராகவா லாரன்ஸுடன் இணைந்து நடித்ததை போன்று ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார். ‘ஸ்ரீகிரீன் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பாக எம்.எஸ்.சரவணன் தயாரிக்கும் இப்படத்தை சண்முகும் முத்துசாமி இயக்குகிறார். இப்படத்தில் இருவேறு தோற்றங்களில் நடிக்கும் சரத்குமார், முதன் முறையாக இப்படத்திற்காக வாள் சண்டை பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இப்படதில் ஜி.வி.க்கு ஜோடியாக மராத்திய நடிகை வைபவி ஷண்டில்யா நடிக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, ரோபோ சங்கர், அருண்ராஜா காமராஜ் ஆகியோரும் நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு கதாநாயகனாக நடிக்கும் ஜி.வி.பிரகாஷே இசை அமைக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை விவேக் ஹர்ஷன் கவனிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விக்ரம் வேதா - டீசர்


;