பழம்பெரும் கதாசிரியர் பஞ்சு அருணாச்சலம் காலமானார்!

எழுத்தாளர் பஞ்சு அருணாச்சலம் காலமானார்!

செய்திகள் 9-Aug-2016 1:54 PM IST VRC கருத்துக்கள்

ஓரிரு நாட்களுக்கு முன்பு தான் தமிழ் சினிமா பிரபல எழுத்தாளரும், கதாசிரியரும், இயக்குனரும், நடிகருமான ‘வியட்நாம் வீடு’ சுந்தரம் எனும் பிரபலத்தை இழந்தது. அதைப்போல தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக விளங்கிய ஜோதி லட்சுமியும் நேற்று இரவு காலமானார். இந்த இரண்டு கலைஞர்களின் மறைவு ஏற்படுத்திய பேரதிர்ச்சியிலிருந்து தமிழ் சினிமா உலகம் மீளாத நிலையில் மற்றொரு பிரபலத்தையும் இழந்துள்ளது. அவர் பஞ்சு அருணாச்சலம்! கதாசிரியர், பாடல் ஆசிரியர், இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர் என பல முகங்களை கொடண்ட பஞ்சு அருணாசலம் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இன்று சென்னையிலுள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 75. ‘எங்கம்மா சபதம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான பஞ்சு அருணாச்சலம் 50 திரைப்படங்களுக்கும் மேல் கதை வசனம் எழுதியுள்ளார்.
சிவகுமார், சுஜாதா நடித்து தேவராஜ் மோகன் இயக்கத்தில் 1976-வெளியான ‘அன்னக்கிளி’ படத்தில் இவர் எழுதிய பாடல்கள் மிகப் பிரபலமானது. இளையராஜா இசை அமைத்து வெளியாகிய முதல் படம் ‘அன்னக்கிளி’ என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி நடித்து, சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய ‘வீரா’ திரைப்படம் இவர் கதை திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்த படமாகும். இந்த படம் தவிர ரஜினி நடித்த ‘மனிதன்’, ‘ராஜா சின்ன ரோஜா’ கமல்ஹாசன் நடித்த ‘ஜப்பானில் கல்யாணராமன்’ உட்பட பல படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதிய பஞ்சு அருளாச்சலம் ‘என்ன தவம் செய்தேன்’, ‘நாடகமே உலகம்’, ‘தம்பி பொண்டாட்டி’ உட்பட பல படங்களை இயக்கவும் செய்துள்ளார். திரையுலகில் அனைவருடனும் நல்ல நட்பை பாராட்டி வந்த பெரும் சாதனையாளரான பஞ்சு அருணாச்சம் இன்று நம்முடன் உயிருடன் இல்லை! இவரது மறைவு தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் பெரும் இழப்பாகும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;