பிரசாந்த் ஜி. சேகர் இயக்கத்தில் புதுமுகம் அஸ்வின், டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரம், வர்ஷா நடிக்கும் படம் ‘யானும் தீயவன்’. பெரும்பாலும் காமெடி வேடங்களில் நடித்து வந்த ராஜு சுந்தரம் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் பொன்வண்ணன், வி.டி.வி.கணேஷ், சந்தானபாரதி ஆகியோரும் நடிக்கிறாகள். ‘பெப்பி சினிமாஸ்’ சார்பில் இசை அமைப்பாளரும், வழக்கறிஞருமான ஜேரோம் புஷ்பராஜ் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் அஸ்வின் இவரது மகனாவார்.
‘15 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்ப்டுள்ளது. ஒரு இளம் ஜோடியான ஹீரோவும் ஹீரோயினும் கெட்ட ஒரு கும்பலிடம் சிக்குக்கிறது. சூழ்நிலை காரணமாக நல்லவனாக இருந்த ஹீரோ கெட்டவனாகிறார். அதன் பிறகு நடக்கும் பரபர சம்பவங்கள் தான் படம்! இது கேங்ஸ்டர் கதை என்றாலும் மற்ற கேங்ஸ்டர் கதைகளிலிருந்து இப்படம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்’’ என்கிறார் இய்க்குனர் பிரசாந்த் ஜி.சேகர்.
இப்படத்திற்கு அச்சு ராஜாமணி இசை அமைக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.
‘ஸ்டுடியோ கிரீன்’ கே.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் படம் ‘தேள்’. நடன இயக்குனரும், நடிகருமான...
ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி நடிக்கும் படம் ‘சார்லி சாப்ளின்-2’. அம்மா...
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபு தேவா நடித்த முதல் படம் ‘தேவி’. இந்த படம் வெற்றிப் படமாக அமைந்ததை...