‘பிச்சைக்காரன்’ சசி இயக்கத்தில் வெங்கடேஷ்?

மீண்டும் சசி இயக்கத்தில் வெங்கடேஷ்?

செய்திகள் 9-Aug-2016 11:04 AM IST VRC கருத்துக்கள்

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’ தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பெரும் வெற்றிபெற்றது. இந்த பட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சசியின் அடுத்த பட அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. ஆனால் இயக்குனர் சசி தெலுங்கு நடிகர் வெங்கடேஷிடம் ஒரு கதை சொல்லியிருக்கிறார் என்றும் அந்த கதை வெங்கடேஷுக்கு பிடித்துவிட்டது என்றும் கூறப்படுகிறது. அதனால் இவர்கள் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைவது உறுதி என்கிறார்கள். ஏற்கெனவே சசி தெங்லுங்கில் வெங்கடேஷை வைத்து ‘சீனு’ என்ற படத்தை இயக்கியிருகிறார். இது சசி தமிழில் இயக்கிய ‘சொல்லாமலே’ படத்தின் ரீமேக் ஆகும். இந்த படம் சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;