‘ஸ்லம்டாக் மில்லியனர்’ பாடகரை அழைத்து வந்த ‘கவலை வேண்டாம்’ டீம்!

ஜீவா, காஜல் அகர்வால் நடிக்கும் ‘கவலை வேண்டாம்’ படத்தின் பாடல் ஒன்றை ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ பாடகர் பாடுகிறார்

செய்திகள் 9-Aug-2016 10:36 AM IST Chandru கருத்துக்கள்

சமீபத்தில் வெளிந்த ‘திருநாள்’ படத்திற்கான விமர்சனங்கள் இருவேறுவிதமாய் இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் ‘கவலை வேண்டாம்’ என தனது அடுத்த படைப்புகளில் கவனமாகப் பணியாற்றி வருகிறார் ஜீவா. ‘யாமிருக்க பயமே’ டீகே இயக்கும் இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இளம் இசையைமப்பாளர் லியோ ஜேம்ஸ் ‘கவலை வேண்டாம்’ படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் ‘உன் காதல்...’ என்ற அழகான மெலடி பாடலை பாடுவதற்காக ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் இடம்பெற்ற ‘ஜெய் ஹோ...’ பாடலைப் பாடிய அர்மான் மாலிக் அழைக்கப்பட்டிருக்கிறார். இமான் இசையமைப்பில் வெளிவந்த ‘பாயும் புலி’ ஆல்பத்தில் ‘யார் இந்த முயல்குட்டி....’ என்ற சூப்பர்ஹிட் மெலடியைப் பாடியவர் இந்த அர்மான் மாலிக் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொரில்லா - ட்ரைலர் 1


;